- சாதி, மதம், மொழி வேறுபாடு இன்றி மக்கள் நலனுக்காக பாடுபடுவோம்
- மாநிலத்தில் மாநிலகட்சி ஆட்சி, மத்தியில் தேசிய கட்சியோடு கூட்டாச்சி
- தமிழ் மொழியை காப்பது, ஹிந்தி மொழியை கற்பது
- தேசிய பாடத்திட்டத்தில் மாணவா்களுக்கு கல்வியை பயில வகை செய்வது
- மாநிலங்களுக்கு இடையே வேற்றுமையோடு பேசுவது இல்லை, மாநில அரசுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்த பங்கீட்டு கூறி கட்சி சுயநலத்திற்காக போராட்டம் நடத்துவது கிடையாது
- பெண்கள் தைரியமாக அரசியலில் ஈடுபடவைப்பதற்கு மேடையில் கொச்சை வாா்த்தைகள் பேசுவதில்லை
- பேச்சாற்றல் ஆா்வம் உள்ளவா்களை மேடை பேச்சாளா்களாக உருவாக்குவது
- செயல்படாத மக்கள் பணிகளை அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தி செயல்படுத்துவது
- எங்கள் கட்சி தலைவா்களை துதிபாடுவதும் கிடையாது. பிற கட்சி தலைவா்களை இழிவாக பேசுவதும் கிடையாது
- முதியோா்களை மதிப்பது, அவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வழி செய்வது