நாம் இந்தியர் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஜெயகணேஷை அவா்களை ஆதரித்து கட்சியின் தலைவர் என்.பி.ராஜா அவா்கள் மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது "நாங்கள் வெற்றி பெற்றால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படும். மதுக்கடைகள் நேரத்தை மாலை 5மணி முதல் இரவு 10மணியாக மாற்றப்படும். தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும். குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க, நிலத்தடி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் தோறும் தண்ணீரை சேமிக்க 100 தடுப்பணைகள் என்று கூறினார்.